நீலகிரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கட்டுப்பாடுகளை வலுப்படுத்த தவறினால் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கருத்தில் கொண்டு, நீலகிரி மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் தலைமையில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
கலெக்டர் தலைமையில் நடைபெறும் அனைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.