காட்டெருமைகள் சண்டை: பொதுமக்கள் அச்சம்

உதகை கல்லட்டி மலைப்பாதையில் குடியிருப்பு பகுதியில் சண்டையிட்ட காட்டெருமைகளால் மக்கள் அச்சம்;

Update: 2021-04-30 12:45 GMT

கல்லட்டி மலைப்பாதை பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டி செல்வதால் வன விலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. கல்லட்டி சோதனை சாவடி அருகே சுமார் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டங்கள் குடியிருப்புகளுக்கு அருகே நாள்தோறும் வருவதால் பொதுமக்கள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த காட்டெருமை கூட்டத்தில் 2 காட்டெருமைகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் தேயிலை பறிக்க சென்ற மூதாட்டியை காட்டெருமை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

காட்டெருமை கூட்டத்தால் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் பொதுமக்கள், அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News