முக கவசம் அணியாதோருக்கு அபராதம் .
உதகையில் மார்கெட் மற்றும் நகர பகுதிகளில் மாஸ்க் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
உதகை நகரில் பல பகுதிகளில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறை ரூபாய் 200 அபராதம் விதித்தது. மேலும் முக கவசம் கட்டாயம்அணிய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது..
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக முக கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை பின்பற்றுதலையும் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் முகக் கவசம் அணியாமல் சுற்றி திரிபவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் , வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், மற்றும் காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
உதகை நகராட்சி தினசரி சந்தையில் போலீசார் இன்று முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் சந்தைக்குள் கடைகளுக்கு முகக்கவசம் அணியாமல் பொருட்கள் வாங்க வரும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.