உதகை அருகே கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத திருமண வீட்டிற்கு அபராதம்
திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததும், சிலர் முககவசம் அணியாமல் இருந்ததும் தெரியவந்தது.
கொரோனா பரவலை தடுக்க திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட நபர்களோடு நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று உதகை அருகே நஞ்சநாடு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்வுக்கு நஞ்சநாடு மட்டுமில்லாமல் அருகே கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கலந்துகொண்டனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து உதகை வருவாய் ஆய்வாளர் மகேந்திர குமார், கிராம நிர்வாக அலுவலர் ரஷியா பேகம் ஆகியோ,ர் நஞ்சநாடுக்கு சென்று ஆய்வு நடத்திய ஆய்வில் திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததும், சிலர் முககவசம் அணியாமல் இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அரசு விதிமுறையை மீறி கூட்டம் கூடியதாக மணமகனின் தந்தை சண்முகத்திடம் ரூ.5,000 அபராதம் வசூலித்தனர்.