உதகை மார்க்கெட்டில் சீல் வைக்கப்பட்டிருந்த கடைகள் திறப்பு
உதகை மார்க்கெட்டில் கடந்த 10 நாட்களாக சீல் வைக்கபட்ட கடைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.;
உதகை மார்க்கெட் பகுதியில் கடையை திறக்கும் வியாபாரி.
கடந்த 25ஆம் தேதி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள வாடகை நிலுவை தொகை செலுத்தாத கடைகள் ஆணையாளர் சரஸ்வதி தலைமையில் சீல் வைக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் பலர் புதிய வாடகை முறையை செலுத்த கால அவகாசம் வேண்டும் என கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும் நகராட்சி சார்பில் கூறப்பட்ட போது நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக புதிய வாடகை முறையை வியாபாரிகள் செலுத்தாததால் நகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால் வாடகையை உடனடியாக செலுத்த பலமுறை வியாபாரிகளிடம் கூறப்பட்டது. அதன்பின் வாடகை செலுத்தாத கடைகளை கண்டறிந்து சீல் வைக்கப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் கூறியது. இதையடுத்து கடந்த 10 நாட்களாக மார்க்கெட்டில் உள்ள சீல் வைக்கபட்ட கடைகள் திறக்காமல் இருந்த நிலையில் பெரும்பாலான வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்திடம் தங்களது வாடகை தொகையை செலுத்தினர். இதையடுத்து வாடகை செலுத்திய கடைகளின் சீல் அகற்றப்பட்டு திறக்கப்பட்டன.