மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் ஊட்டி மாணவர் முதலிடம்

நவ 17 முதல் 20 ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Update: 2021-10-27 11:15 GMT

முதலிடம் பெற்ற மாணவன் அரிவின்.

இந்திய பளுதூக்கும் சங்கம், தமிழ்நாடு பளுதூக்கும் சங்கம் சார்பில், மாநில அளவிலான பளுதூக்கும் போட்டிகள் கரூர் மாவட்டம் குளித்தலையில் கடந்த 23, 24-ம் தேதிகளில் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தும்மனட்டி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் அரிவின் (வயது 19 என்பவர்) ஜூனியர் பிரிவில் போட்டியில் கலந்து கொண்டார். போட்டியில் 195 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்ததால், வருகிற நவம்பர் 17-ம் முதல் 20-ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News