பிளாஸ்டிக் பயன்பாடு: உதகை கடைகளில் திடீர் சோதனை
நீலகிரியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு, நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, அரசு தடை விதித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க, உதகை நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதரன் சுகாதார ஆய்வாளர் வைரம் சுகாதார அதிகாரிகள் நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக 4 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொரோனா காலம் என்பதால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்க வில்லை.
எனினும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்; தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனர்.