மக்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி: உதகை நகராட்சி கமிஷனர் ஆய்வு
பால் முகவர்கள், நாளிதழ் விநியோகிப்பவர்கள் உள்ளிட்ட மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாக, உதகமண்டலம் நகராட்சி ஆணையர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.;
உதகை நகரில், மக்களுடன் நேரடியாக தொடர்பு உள்ளவர்களுக்கு, உதகமண்டலம் நகராட்சி அலுவலகத்தில் தடுப்பூசி போடப்பட்டது. இதை, நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசிகளை செலுத்தும் முகாமை, மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, உதகமண்டலம் நகராட்சி சந்தையில், ஏற்கனவே உதகமண்டலம் நகராட்சி மூலம் வியாபாரிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இதையடுத்து இன்று நகராட்சி அலுவலகத்தில் மக்களிடையே நேரடியாக தொடர்புடைய பால் முகவர்கள், நாளிதழ் விநியோகம் செய்பவர்கள், கொரியர் பணி மேற்கொள்பவர்கள் 200க்கும் மேற்பட்டோருக்கு, இன்று நகராட்சி அலுவலகத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
தடுப்பூசி போடும் பணிகளை, உதகமண்டலம் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி நேரில் பார்வையிட்டார். கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.