உதகையில் மருத்துவக்கல்லூரி: திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

உதகையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை, காணொலி காட்சி வாயிலாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

Update: 2022-01-12 12:00 GMT

தொடக்க விழாவில் பங்கேற்ற தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கலெக்டர் அம்ரித் உள்ளிட்டோர். 

நீலகிரி மாவட்ட மக்களின் நீண்டகால கனவை நனவாக்கும் வகையில் 461 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரியை,  பிரதமர் நரேந்திர மோடி, இன்று  காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

உதகை காக்கா தோப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பாரதிய ஜனதா கட்சி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன்,  மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித், மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் மனோகரி ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

Tags:    

Similar News