கனமழை: உதகையில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

உதகை நகரில் காற்றுடன் பெய்த கனமழையால், 30 அடி உயர மண் திட்டு சரிந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-19 04:40 GMT

கடந்த 4 நாட்களாக நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதனால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உதகை நகரில் இரவு பகல் என தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

உதகை நகரில் தனியார் மருத்துவ மனை கல்லூரிக்கு செல்லும் பிரதான சாலை மற்றும் 5 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையில் 30 அடி உயரம் கொண்ட மண் திட்டு சரிந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால் நாள்தோறும் அச் சாலையைப் பயன்படுத்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் இருசக்கர வாகனத்தை தவிர்த்து மற்ற வாகனங்கள் மாற்று பாதையில் சென்று வருகின்றன எனவே சாலையில் விழுந்து மண் சரிவை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News