உதகை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
உதகை அரசு தலைமை மருத்துவமனையில் இன்று 2 ம் டோஸ் தடுப்பூசி செலுத்த வந்த பொது மக்களுக்கு தடுப்பூசி இல்லை என கூறியதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் வாக்குவாதம் செய்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி செலுத்த வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட டோக்கனை விட குறைவான அளவிலே தடுப்பு ஊசி செலுத்தி மீதமுள்ள மக்களுக்கு தடுப்பூசி இல்லை என கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் தடுப்பூசி செலுத்தாதது பற்றி அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்கும் பொழுது சரியான முறையில் பதில் அளிப்பதில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிப்பதோடு டோக்கன் வழங்கப்பட்ட அளவிற்காவது தடுப்பூசி செலுத்த வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.