நீலகிரியில் உள்ளாட்சி தேர்தல் விதிமுறை புகார் எண் அறிவிப்பு
நீலகிரி மாவட்ட காவல்துறையின் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தை 9789800100 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.;
பிப் 19.02.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணைய விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ள நிலையில், சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் ரிட் மனுவில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் அல்லது மற்ற அமைப்பை சார்ந்தவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் கட்சி சம்பந்தப்பட்டோ அல்லது அமைப்பு சம்பந்தப்பட்டோ கொடிகள், பெயர் பலகை ஆகியவற்றை பொருத்துவது சம்பந்தமாக மோட்டார் வாகனச் சட்டத்தின்படி விதிமுறைகள் விதிக்கப்பட்டு உள்ளது.
அது சம்பந்தமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் சிறப்பு வாகன சோதனை மேற்கொண்டு வழக்குகள் பதிவு செய்யப்படும். லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். எனவே, தேர்தல் மீறல் இருப்பின் பணம் பட்டுவாடா, பொருட்கள், உணவு, மதுபான வகைகள் வழங்குதல் குறித்து தகவல் தெரிய வரும் பட்சத்தில் உடனடியாக பொதுமக்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையின் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தை 9789800100 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கலாம் அல்லது குறுஞ்செய்தி அனுப்பலாம். எப்படி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். அவர்களது விவரம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தெரிவித்து உள்ளார்.