நீலகிரி: வாக்குப்பதிவு எந்திரங்கள் அடுக்கி வைப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் கழிப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Update: 2022-02-21 18:15 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் 13 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 15 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வார்டு வாரியாக அடுக்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து பாதுகாப்பு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உதைகை நகராட்சி வாக்கு எண்ணும் மையமான ரெக்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வாக்குகளை எண்ண 9 மேஜைகள் போடப்பட்டு உள்ளது.

தபால் வாக்குகள் எண்ணுவதற்கு ஒரு மேஜை போடப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணிகளை மேற்பார்வையிட்டு தேர்தல் முடிவுகளை அறிவிக்க உள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்ற ஒப்புதல் கடிதத்தை காண்பித்த பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் மையத்தில் கழிப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News