உதகை சாலையில் திடீரென விழுந்த ராட்சத மரம் : ஊரடங்கால் பெரும் விபத்து தவிர்ப்பு
உதகை அருகே முள்ளிக்கொரை பகுதி தேசிய நெடுஞ்சாலையில் ராட்ஷச மரம் விழுந்தது.;
நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு மஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த ராட்ஷச மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.
உதகை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழமை வாய்ந்த 100 அடி மரம் சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
உதகையில் இருந்து நஞ்சநாடு மற்றும் மஞ்சூர் செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் இருந்த பழமையான மரம் திடீரென விழுந்தது. ஊரடங்கு இருந்துவரும் நிலையில் விவசாய பணிகளுக்கு மட்டும் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மரம் விழுந்த நேரத்தில் எந்த வாகனமும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
#இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாலை 5 மணியிலிருந்து 7 மணி வரை சுமார் 2 மணி நேரம் போராடி ராட்சத மரத்தை தீயணைப்புத்துறையினர் அப்புறப்படுத்தினர். பின்பு விவசாய பணிகளுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் சென்றன. மேலும் அதிகாலை வேளையில் அட் சாலை வழியாக நடைப்பயிற்சி மேற்கொள்வோர் ஊரடங்கு முடியும் வரை நடை பயிற்சி மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதனால் நடை பயிற்சிக்கும் யாரும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.