நீலகிரி மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பிரியதர்ஷினி முக்கிய தகவல்
உதகையில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேரடியாக தொகையை செலுத்தி பணிகளை செயல்படுத்தி பயன்பெறலாம்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் வாழும் பொதுமக்களின் சுயசார்பு தன்மையை ஊக்குவிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், சமுதாய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி பராமரிப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரித்து அதன்மூலம் தன்னிறைவு பெற செய்யவும் நமக்கு நாமே திட்டம் 2021-2022-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை குறிப்பிட்டு பொதுமக்களின் பங்களிப்பான மூன்றில் ஒரு பங்கு தொகையை வழங்க சம்மதம் தெரிவித்து, விண்ணப்ப படிவம் ஒன்றில் கோரிக்கை வடிவில் செலுத்த வேண்டிய உரிய தொகையை மாவட்ட கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதகை என்ற பெயரில் வரைவோலையாக உதகை யில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேரடியாக செலுத்தி பணிகளை செயல்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.