உதகையில் நீலகிரி மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது
தமிழகத்தில் வரும் 2026ல் பாஜக ஆட்சி அமைக்கும் என உதகையில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் விவசாய அணி தலைவர் நாகராஜ் கூறினார்;
நீலகிரி மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் உதகையில் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
அவர் கூறும்போது, தமிழகத்தில் இளைஞர்கள் எழுச்சியோடு சிறந்து எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. வளர்ச்சி பிரமாண்டமாக உள்ளது.2026ல் பாஜக ஆட்சி அமைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக, அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு உரிமை தொகை, சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றார்.
செயற்குழு கூட்டத்தில், இது வரை 130 கோடி நோய் தடுப்பு ஊசிகள் வழங்கிய பாரத பிரதமருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள். பேரூராட்சிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களி வெற்றி பெற செய்ய நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.
கன மழையில் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் சேதமடைந்த சாலைகள், மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் முறையாக செல்ல கால்வாய் பணிகளை தீவீரப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் வராமல் தடுக்கும் விதத்தில், அகழிகள் வெட்டவும் சூரிய மின் வேலி அமைக்க வேண்டும்.
கூடலூர் சட்டப்பேரவை தொகுதியில் தனியார் வன பாதுகாப்புச் சட்டம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வளவிலங்குகளால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. பத்து லட்சம் இழப்பீடு வழங்கி, குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்.
ஆதிவாசிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் மின் வசதி, சாலை வசதிகள், தொகுப்பு வீடுகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், போஜராஜன், ஈஸ்வரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.