நீலகிரி மாவட்டத்தில் 100- ஐ தொட்டது டீசல் விலை

நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை 100- ஐ தொட்டது.

Update: 2021-10-17 10:43 GMT

மலை மாவட்டமான நீலகிரியில், கடந்த ஜூன் 18-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ கடந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து ரூ.105-ஐ நெருங்கியது.  கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை ஏறுமுகமாக உள்ளது. ஊட்டியில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 30 பைசா உயர்ந்து ரூ.104.32-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.104.73 க்கு விற்பனையானது.

அதேபோல், சமீப நாட்களாக டீசல் விலை ரூ.100-ஐ நெருங்கி வந்தது. ஊட்டியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100.34-க்கு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ரூ.99.95-க்கு விற்பனையானது. நேற்று 39 பைசா அதிகரித்து பெட்ரோலை தொடர்ந்து டீசலும் ரூ.100-ஐ கடந்து உள்ளது.

சமவெளிப் பகுதிகளில் இருந்து,  நீலகிரிக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் சரக்கு வாகனங்கள், லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இந்த வாகனங்களுக்கு முக்கிய எரிபொருளாக டீசல் உள்ளது. டீசல் விலை உயர்ந்து உள்ளதால், வாடகை கட்டணம் அதிகரித்து இருக்கிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

Tags:    

Similar News