நீலகிரி: விவசாய பணிகளுக்கு செல்ல கொரோனா சான்று கட்டாயம்

கொரோனா வழி முறைகளை பின்பற்றாவிட்டால் காவல்துறையினர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் அறிவிப்பு.;

Update: 2021-05-23 14:58 GMT

நீலகிரி மாவட்டத்தில் 200 ஹெக்டர் பரப்பளவில் காரட் பயிரிட்டு தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.

விவசாய பணிகளுக்கென கொரோனா தொற்று காலத்தில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காரட் அறுவடை மற்றும் விவசாய பணிகளுக்கு வேலையாட்கள் அழைத்து செல்லும்போது கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே விவசாய அறுவடை பணிகளுக்கு பணியாளர்களை அழைத்து செல்லும் விவசாயிகள் மற்றும் விவசாய ஒப்பந்ததாரர்கள் பணியாளர்களை ஆக்சிமீட்டர் மற்றும் வெப்பநிலை கருவி மூலம் பரிசோதித்துஉறுதி செய்த பின்னரே பணிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதனை கடைபிடிக்காவிட்டால் பெருந்தொற்று அதிக அளவில் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேற்கண்ட கொரோனா வழி முறைகளை பின்பற்றாவிட்டால் காவல்துறையினர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News