விலை பட்டியலோடு காய்கறி விற்பனை: தவறினால் பாஸ் ரத்து என எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகள் விற்பனை செய்வோர், விலை பட்டியலோடு விற்பனை செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.;

Update: 2021-05-28 14:05 GMT

நீலகிரி மாவட்ட ஆட்சியர்

தமிழகம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொது மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் 246 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வதற்காக உழவர் சந்தை, காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மார்க்கெட் கூட்டமைப்பு சங்கள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் பொருட்கள் வாகனம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கலெக்டர்  இன்னசன்ட் திவ்யா கூறுகையில்,  தோட்டக்கலைத்துறை மூலம் அனைத்து பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நடமாடும் வாகனங்களில் விலைப்பட்டியல் கண்டிப்பாக பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அவ்வாறு விலைப்பட்டியலை வைக்காத வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ் திரும்ப பெறபடும். மேலும் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால், அவர்களின் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

முன்னதாக கொரோனா சிகிச்சைக்காக 9 தனியார் மருத்துவமனைகளில்,  முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொண்டு பயன்பெறுமாறு, மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

Similar News