மறைந்த நடிகர் விவேக்கிற்கு நீலகிரி ஆட்சியர் இரங்கல்
நீலகிரி மாவட்டத்தில் நடிகர் விவேக் லட்சகணக்கான மரக்கன்றுகள் நட்டினார், அவரது ஆன்மா சாந்தியடைய கலெக்டர் வேண்டுதல்.;
நடிகர்விவேக் மறைவிற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் உட்பட மாவட்டத்தில் பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். மறைந்த நடிகர் விவேக் நீலகிரிக்கு மரக்கன்றுகளை நட அடிக்கடி வருகை புரிவார். மாவட்ட நிர்வாகத்துடன் இணக்கமாக இருந்த அவர், பல விழாக்களில் - கலந்துகொண்டு பல பகுதிகளில் மரக்கன்றுகளை நடுவதை மேற்கொண்டார்.
குறிப்பாக, இங்குள்ள பள்ளிகள் மற்றும் சில அமைப்புகள் சார்பில் நடந்த மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட்திவ்யா பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நடிகர் விவேக்கை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இது வரை இவர் மூலம் நீலகிரி மாவட்டத்தில் பல லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அவர் மறைந்த நிலையில், அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட்திவ்யா அஞ்சலி செலுத்தும் விதமாக தனது முகநூலில் கூறியிருப்பதாவது:'மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் தீவிரபற்றாளரான நடிகர் விவேக் இயற்கையை பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 4 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்வதற்கு துணையாக இருந்தார். மேலும், பல்வேறு சமூக சேவை பணியிலும் ஈடுபட்டார். அவரது ஆன்மாசாந்தியடைய பிரார்த்திக்கிறோம் இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டிருந்தார் .