நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை- கோடநாடு பகுதியில் 94 மி.மீ பதிவு
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்துள்ளது; அதிகபட்சமாக கோடநாடு பகுதியில் 94 மி.மீ பதிவானது.;
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. ஊட்டியில் இரவில் பெய்ய தொடங்கிய மழை, விடிய, விடிய கனமழையாக நீடித்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்று காரணமாக, ஊட்டி சேரிங்கிராசில் இருந்து கலெக்டர் அலுவலக சந்திப்பு செல்லும் சாலையில் மரம் வேருடன் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதேபோல், பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
நீலகிரியில் இன்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: ஊட்டி-38.7, கிளன்மார்கன்- 28, மசினகுடி-25, குந்தா-25, அவலாஞ்சி-31, கெத்தை-40, எமரால்டு-26, கிண்ணக்கொரை-38, அப்பர்பவானி-35, குன்னூர்-44, பர்லியார்-58, கேத்தி-29, எடப்பள்ளி-63, கோத்தகிரி-87, கோடநாடு-94, கூடலூர்-26, தேவாலா-33, பந்தலூர்-50, சேரங்கோடு-30 உள்பட மொத்தம் 1100.70 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 37.96 ஆகும்.