உதகையில் பிரசவம் முடிந்த பெண்ணின் கையில் சிக்கிய ஊசி

உதகை அரசு மகப் பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கையில் ஊசி சிக்கியதால் பரபரப்பு.

Update: 2021-08-07 15:22 GMT

பிரசவமான பெண்ணின் கையில் சிக்கிய ஊசி.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள ராஜ்பவன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளியான சுரஜ் பகதூர. இவரது மனைவி சஞ்சனா (வயது 28). சுரஜ் பகதூர சஞ்சனா தம்பதிக்கு இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காக கடந்த 30-ந் தேதி உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் சஞ்சனா அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 4-ம் தேதி சஞ்சனாவிற்கு சுக பிரசவத்துடன் அழகான பெண் குழந்தை பிறந்ததுள்ளது. தொடர்ந்து சில நாட்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். பின்னர் சஞ்சனாவிற்ககு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்காக கையில் குளுகோஸ் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டு இருந்த ஊசியை செவிலியர் எடுத்து உள்ளார்.அப்போது ஊசி உடைந்து கையில் சிக்கி உள்ளது. இதனால் சஞ்சனா வலியால் அவதி அடைந்தார். இது குறித்து பகதூர் டாக்டரிடம் தெரிவித்தும் சிகிச்சை அளிக்க முன் வரவில்லை. 1 மணி நேரத்திற்கு பிறகு வந்த  மருத்தவர்கள் சஞ்சனாவை பரிசோனை செய்து உடனடியாக கோவைக்கு அழைத்து செல்ல பரிந்துரை செய்தனர்.

அப்போது 108-க்கு தகவல் கொடுத்தும் 3 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராத காரணத்தாலும், பெண்ணின் கையில் சிக்கிய ஊசியை எடுக்க அலைக்கழிக்கப்பட்டதாக கூறி ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமளையை முற்றுகையிட்டுனர். மேலும் இது குறித்து உதகை நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் பகதூரை சமாதானம் செய்து கோவை அரசு மருத்துவமனைக்கு 108 -மூலம் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து டாக்டர் ரவிசங்கர் கூறுகையில் பாதிக்கபட்ட பெண்ணின் கையில் சிக்கயது ஊசி அல்ல அது ஊசிக்கு மேல் பகுதியில் உள்ள வெண்வ்ளான் எனப்படும் பிளாஸ்டிக் பொருளாகும். இது எதிர்ச்சியாக நடத்த ஒன்று. இதற்கு கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். அங்கு சிறிய சிகிச்சைக்கு பின் அகற்றிவிடாலம், உயிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என தெரிவிதார்.


Tags:    

Similar News