உதகையில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாட்டம்
தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு, சான்றுகள் வழங்கப்ப்டடது.
12வது தேசிய வாக்காளர் தின விழா இன்று நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஆட்சி தலைவர் S.P. அம்ரித் தலைமையில் நடைபெற்ற விழாவில் மத்திய அரசின் தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குநர் பாலாஜி கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
5879 இளம் வாக்காளர்களுக்கு வண்ண புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதன் முதற் கட்டமாக 5 பேர்களுக்கு வழங்கினார். மற்றும் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.