நஞ்சநாடு ஊராட்சியில், ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம்; கலெக்டர் அம்ரித் தகவல்
Nilgiri News, Nilgiri News Today- ஊட்டியில் உள்ள நஞ்சநாடு ஊராட்சியில், ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Nilgiri News, Nilgiri News Today- நஞ்சநாடு ஊராட்சியில் 15- வது நிதிக்குழு மானியத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட உள்ளது என்று கலெக்டர் அம்ரித் கூறினார்.
நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு ஊராட்சி, மேல்கவுஹட்டி சமுதாய கூட வளாகத்தில் சுதந்திர திருவிழாவை முன்னிட்டு நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டார். இந்த கிராம சபைக்கூட்டத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம் போன்ற அடிப்படை தேவைகள், ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய கூட்டப்பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது கலெக்டர் அம்ரித் கூறியதாவது,
மாவட்ட ஊரக வளர்ச்சி மூலம் நஞ்சநாடு ஊராட்சி பகுதியில், 'அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2.0" மூலம் 28 பணிகள் ரூ.1.25 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.4.10 கோடி மதிப்பில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் 73 பணிகளில் 54 பணிகள் நடந்து வருகிறது. 19 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது.
நஞ்சநாடு ஊராட்சியில் 15- வது நிதிக்குழு மானியத்தில், ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட உள்ளது. மேல்கவுஹட்டி முதல் குருத்துக்குளி வரை மண்சாலையை தார்சாலை அல்லது கான்கிரீட் சாலையாக அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குருத்துக்குளி பகுதியில் சுமார் 2,000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பின்னர் பயனாளிகளுக்கு ரூ.41.28 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் போலீஸ் எஸ்.பி பிரபாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, ஆவின் பொது மேலாளர் ஜெயராமன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி, ஆர்.டி.ஓ. துரைசாமி, நகர்மன்ற தலைவர் வாணீஸ்வரி, நஞ்சநாடு ஊராட்சி தலைவர் சசிகலா, ஊர் தலைவர் நடராஜன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஊட்டி மாரியம்மன் கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டார்.