நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான மறைமுக தேர்தல்

நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான மறைமுக தேர்தல், 15 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறுகிறது.;

Update: 2022-03-31 00:15 GMT

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் நிலை குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. உதகை குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகளில் வரி விதிப்பு மேல்முறையீடு குழு, நியமன குழு, ஒப்பந்த குழு ஆகிய 3 குழுக்கள், 11 பேரூராட்சிகளில் வரி விதிப்பு மேல்முறையீடு குழு, நியமன குழுக்கள் அமைக்கப்படுகிறது. 

தலா ஒரு உறுப்பினர் என மொத்தம் 34 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 15 உள்ளாட்சி அமைப்புகளில் நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் தலைமையில் மறைமுக தேர்தல் கூட்டம் நகர்மன்ற, பேரூர் மன்ற கூட்டரங்கில் நடைபெறுகிறது. இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர்.

Tags:    

Similar News