உதகையில் வாக்கு சாவடிகளை ஆய்வு செய்த நகராட்சி கமிஷ்னர்
வாக்குப்பதிவு அன்று தேர்தல் நடவடிக்கையை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்படும் பணி ஆய்வு செய்யப்பட்டது.
உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் 4 நகராட்சிகளில் 208 வாக்குச்சாவடிகள், அதிகரட்டி, பிக்கட்டி, தேவர்சோலை, உலிக்கல், ஜெகதளா, கேத்தி, கீழ்குந்தா, கோத்தகிரி, நடுவட்டம், ஓவேலி, சோலூர் 11 பேரூராட்சிகளில் 201 வாக்குச்சாவடிகள் மொத்தம் 409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
55 பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து காவல்துறை மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. உதகை நகராட்சியில் காந்தல், சுல்தான்பேட்டை, பாம்பேகேசில் பகுதிகளில் 13 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதை உறுதி செய்ய உதகை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கமிஷனர் காந்திராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளிகளில் குடிநீர், மின்சாரம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இருக்கிறதா, மேஜைகள், நாற்காலிகள் உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாக்குப்பதிவு அன்று தேர்தல் நடவடிக்கையை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்படுகிறது. ஆய்வின் போது வருவாய் அலுவலர் பிரான்சிஸ் உடனிருந்தார்.