முழு ஊரடங்கிலும் இயக்கப்பட்ட ஊட்டி மலை ரயில்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நீலகிரியில் முழு ஊரடங்கிலும் மலை ரயில் இயக்கப்பட்ட து. குடும்பத்துடன் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனர்.

Update: 2022-01-23 11:00 GMT

கொரானா பரவலை கட்டுப்படுத்த,  தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மூன்றாவது வார ஊரடங்கான இன்று உதகை, குன்னூர் , கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

நூற்றுக்கணக்கான காவலர்கள் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும் நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையம் ,குன்னூர் உதகை இடையே முன்பதிவு செய்த பயணிகளுடன் இன்றும் இயக்கப்பட்டது.

மலை ரயிலில் வந்திரங்கிய சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரும் மலை ரயிலில் பயணித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். ரயில் பாதையில் உள்ள குகைகள் மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பது புது அனுபவமாக இருந்தது எனவும் தெரிவித்தனர்.

ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டதால் பல்வேறு இடங்களிலிருந்து வந்த சுற்றுலாப்பயணிகள் சிரமமின்றி தாங்கள் முன்பதிவு செய்துள்ள சுற்றுலா விடுதிகளுக்கு பாதுகாப்பாக சென்றனர். 

Tags:    

Similar News