ஊரடங்கை மீறி சுற்றிய வாகன ஓட்டிகள்
உதகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காரணமின்றி சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் புதிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவம் மற்றும் தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக மக்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உதகை நகரில் காரணமின்றி ஏராளமான நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஊரடங்கை கடைப்பிடிக்காமல் சுற்றி திரிந்தனர். குறிப்பாக மத்திய பேருந்து நிலையம் ,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை, சேரிங் கிராஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் அபராதம் விதித்தனர்.
மருத்துவம் மற்றும் எக் காரணங்களுக்காக வெளியே வந்துள்ளனர் என கேட்டறிந்த பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர் மேலும் காரணம் இன்றி சுற்றித்திரிந்த வாகனங்களுக்கு அபராதம் மற்றும் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.