விடுமுறை நாளான இன்று நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை தினமான இன்று உதகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-03-13 14:01 GMT

பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

உதகையில் விடுமுறை தினமான இன்று சுற்றுலாத் தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள், உதகை அரசு ரோஜா பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை புரிகின்றனர்.

கொரோனா முழு அடைப்புக்கு பின்னர்  விடுமுறை தினமான இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் உதகை சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், படகு இல்லம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டன.

இதனை தொடர்ந்து உதகை அரசு ரோஜா பூங்காவில்  பல்வேறு வண்ண ரோஜா மலர்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ரோஜா பூங்காவிற்கு வருகை புரிந்தனர்.  தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் இதமான காலநிலையை  சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்கின்றனர்.

Tags:    

Similar News