உதகையில் குரங்குகள் அட்டகாசம்
உதகையில் குடியிருப்புப் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;
கடந்த சில நாட்களாக உதகை நகரில் பல பகுதிகளில் குரங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் சுற்றி வரும் குரங்குகள் வீட்டில் உள்ள உணவுப் பொருட்களையும் துணிகளையும் சேதப்படுத்தி வருவதாகவும், குழந்தைகளை கடிக்கும் வகையில் அச்சுறுத்துவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
எனவே நகரப்பகுதிகளில் உலாவரும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.