உதகை அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
உதகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு நேரில் ஆய்வு செய்தார்.;
உதகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.461.19 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் வனத்துறை சட்டத்தை கவனத்தில் கொண்டு தரை தளத்துடன் கூடிய முதல் தளம் மட்டும் கட்டப்படுகிறது.
இதனால் பல கட்டிடங்கள் கட்ட வேண்டி இருக்கிறது. இதனால் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரரிடம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மருத்துவமனை கட்டிடங்கள் ரூ.134.23 கோடியிலும், மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள் ரூ.145.4 கோடியிலும், குடியிருப்பு கட்டிடங்கள் ரூ.181.42 கோடி மதிப்பிலும் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகளை வருகிற ஜூலை மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.