உதகை அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்

Update: 2021-09-26 15:10 GMT

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மாணவர்களுடன் இருக்கையில் அமர்ந்து, அவர்களுக்கு கற்றல் கற்பித்தல் முறையை ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா பாதிப்புக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட சூழ்நிலையில், மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்தப்படுகிறதா, அடிப்படை வசதிகள் உள்ளதா என்று ஆய்வு செய்தார். மாணவர்களுடன் கலந்துரையாடியதோடு, அவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று, ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார்.

மேலும் சில பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், கொரோனா பரவலைத் தடுக்க அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது, நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News