மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ஏப் - 3 முதல் இயக்கம்
ஊட்டியில் கோடை சீசனையொட்டி ஏப்ரல் - 3 ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.;
நீலகிரி :கோடை சீசனையொட்டி ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே ஏப்ரல் 3-ந் தேதிமுதல் ஜூலை 4-ந் தேதி வரை சனி மற்றும்ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாகவது:-ஊட்டியில் கோடை சீசனையொட்டி ஏப்ரல்3-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரைவாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து சனிக்கிழைமதோறும் காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு ஊட்டி வந்தடையும்.
மறு மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும்காலை 11.25 மணிக்கு ஊட்டியில் இருந்துபுறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். இந்த சிறப்பு மலைரெயில் குன்னூரில் மட்டும் நின்று செல்லும்.
இந்த சிறப்பு மலை ரெயிலில் ஒரு முதல் வகுப்புப் பெட்டியும், 2-ம் வகுப்பும் முதல் வகுப்பும் இணைந்த 2 பெட்டிகள்,ஒரு 2-ம் வகுப்பு பெட்டி என மொத்தம் 4பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.முதல் வகுப்பில் 72 இருக்கைகளும், 2-ம்வகுப்பில் 100 இருக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கும். இதற்கான கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.