உதகையில் காட்டெருமை தாக்கி கூலித்தொழிலாளி பலி

இது குறித்து உதகை ஊரக போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-12-01 15:15 GMT

பைல் படம்.

உதகை அருகே நஞ்சநாடு கோழிக்கரை பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 55), கூலித்தொழிலாளி. விவசாய கூலித்தொழிலாளியான இவர் மழையால் பயிர்கள் எவ்வாறு உள்ளது என்று பார்ப்பதற்காக நடந்து சென்றார். அப்போது அங்கு நடமாடிய ஒற்றை காட்டெருமை திடீரென சின்னத்துரையை தாக்கியது.

இதில் அவர் படுகாயம் அடைந்த அவர் உதகை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  சிகிச்சை பலனின்றி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து உதகை ஊரக போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News