நீலகிரியில் நேற்று மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
நீலகிரியில் நேற்று நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 37,127 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.;
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் என 360 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
மேலும் 20 நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மையங்களில் மதியம் வரை நிலையாக அங்கேயே இருந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மதியத்துக்கு மேல் அந்தந்த பகுதிகளில் தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிந்து வீடு தேடி சென்று போடப்பட்டது.
முகாமில் 38 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முடிவில் ஒரே நாளில் 37 ஆயிரத்து 127 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
2-வது டோஸ் செலுத்த குறிப்பிட்ட நாட்கள் பூர்த்தியானவர்கள் தாமாக முன்வந்து செலுத்திக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.