நீலகிரியில் 246 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நீலகிரி சிறப்பு முகாம்களில் முதல் தவனை 93 பேர், இரண்டாவது தவணை 1,101 பேர், பூஸ்டர் தவணை 1,001 பேர் என 2,195 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Update: 2022-03-13 13:49 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், 20 நடமாடும் வாகனங்கள் என 246 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிந்து செலுத்தப்பட்டது. உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்ல சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறப்பு முகாமில் முதல் தவனை 93 பேர், இரண்டாவது தவணை 1,101 பேர், பூஸ்டர் தவணை 1,001 பேர் என 2,195 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை 5,45,131 பேர், இரண்டாவது தவணை 5,31,159 பேர் என மொத்தம் 10,76,290 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News