உதகையில் மருத்துவ கல்லூரி திறப்பு விழா: எம்எல்ஏ வானதி சீனிவாசன் பங்கேற்பு
7.5% இட ஒதுக்கீட்டின் வாயிலாக கிராமப்புறங்களில் இருக்கின்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்கப் பெறுகிறது.;
உதகையில் இன்று நடைபெற்ற மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் கோவை சட்டமன்ற உறுப்பினரும், பாஜகவின் தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
7.5% இட ஒதுக்கீட்டின் வாயிலாக கிராமப்புறங்களில் இருக்கின்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்கப் பெறுகிறது. இதற்கு முன்பாக இதுபோன்ற ஒரு இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் சேர்ந்ததில்லை. இந்த மாற்றத்தை எல்லாம் மக்கள் முன்பாக நாங்கள் வைக்கிறோம். இப்போது ஆரம்பித்திருக்கின்ற மருத்துவ கல்லூரிகளின் கட்டமைப்பை வேகமாக செயல்படுத்த வேண்டும். இந்த மருத்துவக் கல்லூரிகளுடைய சேர்க்கையை தற்போது துவங்கினாலும் மருத்துவமனைகளும் இதற்கான வசதிகளை உருவாக்கினால் மக்களுக்கான உடனடி பலன் கிடைக்கும்.
இதற்காக மாநில அரசு துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 60 சதவிகித நிதி ஒதுக்கீட்டினை மத்திய அரசு செய்துள்ளது. இதை முழுமையாக மாநில அரசு தாங்களே நிதி போட்டு, தாங்களே மாணவர்களை சேர்க்க கூடாதா என்ற விமர்சனங்களையும் முன் வைப்பதாக அவர் கூறினார்.
மத்திய அரசு தமிழகத்தில் இதுபோன்ற மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை கொண்டு வந்ததன் மூலம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் மிக பயன் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.