உதகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாமை, வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி முகாமை தொடங்கி வைத்தார்.;

Update: 2022-03-08 12:42 GMT

மருத்துவ முகாமில், குழந்தைக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம்,  உதகை அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி முகாமை தொடங்கி வைத்தார்.

உதகை வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் குழந்தைகள் நலம், மனநலம், கண் பார்வை, ஆர்த்தோ பிரிவு அரசு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேவையான காது கேட்கும் கருவி, சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. முகாமில் 101 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அவர்களை பெற்றோர்கள் முகாமுக்கு அழைத்து வந்தனர். உதகை வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News