ஊட்டியில் இளைய பாரதம் நற்பணி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு மாஸ்க்குகள் வழங்கப்பட்டன.
கொரோனா வைரசின் இரண்டாம் அலை தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கான கட்டுப்பாடு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வெளியே சென்று வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக ஊட்டி மார்க்கெட் , மணிக்கூண்டு, பேருந்து நிலையம் , உள்ளிட்ட பகுதிகளில் இளைய பாரதம் நற்பணி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு மாஸ்க்குகள் வழங்கப்பட்டன.இதில் முன்னாள் கவுன்சிலர் சம்பத், இளைய பாரதம் நிர்வாகிகள் சரவணன் , சுரேஷ், ராமலிங்கம் , சபரிஷ், செல்வா உள்ளிட்டோர் மாஸ்க்குகள் வழங்கினர்.