உதகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்

உதகையில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2022-04-03 11:35 GMT

உதகை ஏ.டி.சி. பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும்,மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உதகை ஏ.டி.சி. பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு உதகை தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி அதிகரித்து உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்ததால் ஏழை, எளிய பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. தாலுகா உறுப்பினர் ராஜரத்தினம் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

Tags:    

Similar News