உதகையில் மார்க்கெட் வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டம்: பாஜக, அதிமுக ஆதரவு
6 நாட்களுக்கும் மேலாக சீல் வைக்கப்பட்டு திறக்கப்படாமலிருக்கும் உதகை மார்க்கெட்டை திறக்க நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம்.
உதகை மார்க்கெட் சீல் வைக்கப்பட்டு 6 நாட்கள் ஆன நிலையில் வியாபாரிகளுக்காக என்றும் பாஜக, அதிமுக துணை நிற்கும் என உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட இரு கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
உதகை நகரில் நகராட்சிக்கு சொந்தமாக செயல்பட்டு வரும் மார்க்கெட் பகுதியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது. மேலும் புதிய வாடகை முறையை வரைமுறை படுத்தி தரவேண்டுமெனவும் அந்த வாடகையை கட்ட தயாராக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உதகை ஏடிசி பகுதியில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர் இதற்கு நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் கூறும் பொழுது வாழ்வாதாரத்தை இழந்து இன்று கடும் நெருக்கடியில் உள்ள வியாபாரிகளுக்கு தமிழக அரசானது உடனடியாக மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை எடுத்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத், முன்னாள் ராஜ்சபா உறுப்பினர் K R அர்ஜுணன், பாஜகவின், மாவட்ட துணை தலைவர் பரமேஸ்வரன், நகர துணை தலைவர்கள் கணேசன் ஹரிகிருஷ்ணன், நகர செயலாளர்கள் சுரேஸ்குமார், பிரவீன் குமார், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் பட்டாபிராமன், பிரச்சார அணி மாவட்ட துணை தலைவர் மோகன், SC அணி சுரேஸ் ஆகியோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.