உதகையில் மதுபாட்டில்களை கடத்தி சென்றவர் கைது
உதகை தலைக் குந்தா பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மது பாட்டில்களை கொண்டு சென்ற வாகனத்துடன் ஒருவரை கைது செய்தனர்.
உதகை-கூடலூர் சாலை தலைகுந்தாவில் புதுமந்து எனற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் அதிகமாக மதுபாட்டில்கள் இருந்ததால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். காரில் வந்த நபரிடம் விசாரணை நடத்திய போது, சோலூர் தூபகண்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜ் (வயது 33) உதகை டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை வாங்கியதும், சோலூர் பகுதியில் டாஸ்மாக் கடை இல்லாததால் சட்ட விரோதமாக மதுபிரியர்களுக்கு அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரிந்தது. அவரிடம் இருந்து 180 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட 96 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாக விஜயராஜ் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர்.