உதகை அருகே வனப்பகுதியில் கிடந்த ஆண் சடலம்: போலீசார் விசாரணை

உதகை அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-09-14 01:56 GMT

பைல் படம்.

உதகை தலைகுந்தா வனப்பகுதியில் ஆண் பிணம்கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்ட போது அந்த நபர் இறந்து மூன்று நாட்களாகி இருக்கும் என்பதால் உடல் அழுகியநிலையில் கிடந்தது தெரியவந்தது.

இறந்த அந்த நபருக்கு 45 வயது இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.தொடர்ந்து அந்த உடலை கைப்பற்றிய போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.

மேலும் வனப்பகுதியில் இறந்து கிடந்த நபர் யார்?அவர் வன விலங்குகளால் தாக்கப்பட்டு இறந்தாரா?அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News