உதகையில் விதிமீறி செயல்பட்ட ஜெராக்ஸ் கடைக்கு சீல்

உதகையில், ஊரடங்கை மீறி செயல்பட்ட ஜெராக்ஸ் கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததோடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-15 12:47 GMT

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நகர்புறத்தில் பல பகுதிகளில் தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நகர்புறத்தில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதா என்று கண்காணிக்க, நாள்தோறும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உதகை நகரில் அரசு மருத்துவமனை அருகில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அருகாமையில், ஜெராக்ஸ் கடை ஒன்று திறக்கப்பட்டிருந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள், ஜெராக்ஸ் கடைக்கு சீல் வைத்தனர். மேலும் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து நகரில் ஊரடங்கு மீறி செயல்படும் கடைகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News