உதகை அருகே நாயை வேட்டையாடிய சிறுத்தை- மக்கள் பீதி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் காவல் நிலையம் அருகே, நாயை, சிறுத்தை ஒன்று கவ்வி சென்றது, மக்களை பீதியடையச் செய்துள்ளது.;

Update: 2021-05-29 14:10 GMT

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியை சுற்றிலும் வனப்பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த வனப்பகுதிகளில் இருந்து அவ்வப்போது யானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீருக்காக குடியிருப்புகளுக்கு அருகில் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் மஞ்சூர் காவல் நிலையம் அருகே வந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாய் ஒன்றை வேட்டையாடி சென்றது காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சிறுத்தையொன்று நாயினை வேட்டையாடி சென்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News