கிருஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடக்கம்: தேவாயலத்தில் சிறப்பு வழிபாடு

நீலகிரி பல்வேறு ஆலயங்களில் சாம்பல் புதன் கடைபிடிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.;

Update: 2022-03-02 09:37 GMT

உதகை சேரிங்கிராசில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை நடந்தது.

கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவுக்கூறி தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர்.

நடப்பாண்டில் இன்று முதல் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. உதகை சேரிங்கிராசில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை நடந்தது.

நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமை தாங்கி தவக்கால திருப்பலியை நிறைவேற்றினார். கடந்த ஆண்டு காய்ந்த குருத்தோலைகளை எரித்து சாம்பலாக்கி, அதனை மந்திரித்து கிறிஸ்தவர்கள் நெற்றியில் சிலுவை அடையாளம் இட்டு பூசப்பட்டது. ரஷ்யா-உக்ரைன் போரில் அமைதி நிலவ சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பங்கு தந்தை ஜான் ஜோசப் ஸ்தனிஸ், பங்கு மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தவக்காலத்தை முன்னிட்டு தினமும் சிலுவை பாதை தியானித்தல், திருத்தல பயணங்கள் சென்று வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதேபோல் பல்வேறு ஆலயங்களில் சாம்பல் புதன் கடைபிடிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தன.

Tags:    

Similar News