ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

உதகை கோர்ட்டில் சட்ட விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட முதன்மை நீதிபதி, கலெக்டர் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.;

Update: 2021-11-09 16:00 GMT

கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி.

நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், பேண் இந்தியா சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி உதகை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான சஞ்சய்பாபா தலைமை தாங்கி பேசும்போது சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்டம் 9.11.1995 அன்று அமலுக்கு வந்தது.

அந்த நாளை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் சட்டப்பணிகள் ஆணைக்குழு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் நோக்கம் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற அடிப்படையில் நீதி வழங்கும் முறை ஆகியவற்றை உறுதி செய்வதை கொண்டு உருவாக்கப்பட்டது.

சமுதாயத்தில் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க சட்ட அறிவு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி மக்கள் நீதிமன்ற அமைப்புகள் மூலம் எளிமையான, விரைவான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த ஆலோசனைக் குழு மூலம் உதவிகள் செய்யப்படுகிறது.

சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தகுதியுள்ள நபர்களுக்கு இலவச மற்றும் தகுந்த சட்ட பணிகள் ஆலோசனையும், சட்ட விழிப்புணர்வும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் நீதிமன்றம் என்பது மாற்று தீர்வு முறைகளில் ஒன்றாகும். சட்டப்பணிகள் அலுவலகத்தை பொதுமக்கள் அணுகி சட்ட உதவிகள் மற்றும் சட்ட ஆலோசனைகளைப் பெறலாம்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் சட்ட அறிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரம், கிராமங்கள் தோறும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆணைக்குழுவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சட்டப்பணிகள் ஆணைக்குழுவினை பொதுமக்கள் அணுகுவதில் இந்திய அளவில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து உதகை கோர்ட்டில் சட்ட விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட முதன்மை நீதிபதி, கலெக்டர் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஸ்ரீதர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News