உதகையில் சுதந்திர தின விழா புத்தக கண்காட்சி துவக்கம்
75வது சுதந்திர தின விழாவில் தேசத் தலைவர்கள் குறித்த சிறந்த ஒளிப்பதிவு செய்யும் மாணவ, மாணவியர்க்கு ஆகஸ்ட் 15ம் தேதி பரிசு.
75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், உதகை மாவட்ட மைய நூலகம் சார்பில் தேசத் தலைவர்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மாணவ, மாணவியர்களுக்கான புத்தகக் கண்காட்சி இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் தேசத் தலைவர்கள் பற்றி 3 நிமிட ஒளிப்பதிவு செய்து அனுப்ப வேண்டும். அதில் சிறந்து ஒப்புவிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படுமென மாவட்ட மைய நூலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.