சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு வாகனச்சேவை துவக்கம்

நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், பிரச்சார வாகனச்சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-27 11:15 GMT

நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில்,  விழிப்புணர்வு வாகன சேவையை, மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரச்சார வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி,  உதகை கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு,  மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா தலைமை தாங்கி, கொடியசைத்து வாகனத்தை தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று,  விழிப்புணர்வு குறும்படங்கள் மூலம்,  அடிப்படை சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

மேலும் வீடு வீடாகச் சென்று சட்டங்கள் குறித்து விளக்கப்படுகிறது. குறிப்பாக,  மக்கள் நீதிமன்றம் மூலம் மனுக்களுக்கு தீர்வு காண்பது, சமரச தீர்வு மையம் மூலம் வழக்குகளை முடித்து வைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சியில், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், சார்பு நீதிபதி ஸ்ரீதர் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News