நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சாலையில் மண்சரிவு - பொதுமக்கள் அச்சம்

உதகையில் இருந்து கோத்தகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டது.;

Update: 2021-11-27 12:00 GMT

கோத்தகிரி சாலை,  மேல் கோடப்பமந்து பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு.

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒருசில இடங்களில் நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவ்வகையில், தொடர் மழை காரணமாக உதகை,  கோத்தகிரி சாலை மேல் கோடப்பமந்து பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. சாலையில் மண் விழுந்து கிடந்தது. மழை காரணமாக சேறும், சகதியுமாக மாறியது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, சாலையில் கிடந்த மண் அகற்றப்பட்டது.

அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. மண்சரிவு ஏற்பட்டதால், அப்பகுதி வீடுகள் சில, அந்தரத்தில் தொங்குகின்றன. இதனால் அங்கு வசித்து வரும் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News